Thursday, December 27, 2018
Wednesday, December 26, 2018
government exam preparation (science) part -2
அறிவியல்
1. செயற்கை கோள்களில் பயன்படும் கருவி - சூரிய
மின்கலன்கள் .
2. கலிலியோ கண்டுபிடித்த அறிவியல் கருவியின் பெயர்
தொலைநோக்கி .
3. ரோபோவை உருவாக்கியவர் -ஐசக் அசிமோ
4. பால் பதனிடும் முறையைக் கண்டுபிடித்தவர் - லூயி
பாஸ்டியர் . கொண்டு
5. ஏடிஸ் கொசுக்கள் பகலில் கடிக்கும் .
6. இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படும் வாயு
- நைட்ரஜன்
7. வன விலங்குப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட
ஆண்டு - 1972
8. பறவைகள் சரணாலயம் தமிழகத்தில் எங்கு உள்ளது ?
வேடந்தாங்கல்
9. எலிக்கு கேட்கும் திறன் நம்மை விட 90 மடங்கு அதிகம் .
10." மரம் நடு விழா " ஜூன் மாதம் கொண்டாடப்படுகிறது .
11. மனிதனின் கல்லீரல் 1.5 கி .கி . எடையுடையது .
12. நமது உடல் உள்ளுறுப்புகளில் மிகப்பெரியது - கல்லீ ரல்
13. காற்றைத் தூய்மைப்படுத்தும் சிறந்த தாவரம் - மூங்கில்
14. காகிதத்தை முதன் முதலில் கண்டுபிடித்த நாடு சீனா .
15. உலக நீர் நாள் மார்ச் 22
Tuesday, December 25, 2018
Thursday, December 20, 2018
government exam preparation(science)
அறிவியல்
1. லாமா என்ற ஒருவகை கம்பளி ஆட்டிலிருந்து
கம்பளி எடுக்கப்படுகிறது .
2. ஓர் விலங்கு ஆழியக்கூடிய ஆபாத்தான நிலையில் இருந்தால் அவை
அழிந்து கொண்டிருக்கும் இனம்
3. சராசரியாக மனிதன் ஒரு நிமிடத்திற்கு 16 முதல் 18 முறை மூச்சு
விடுகிறான் .
4. மண்புழு மற்றும் அட்டைப்புழுக்கள் தோலின் மூலம்
சுவாசிக்கின்றன .
5. சிற்றினம் என்ற சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் -
ஜான்ரேய் .(
6. நமது உடலில் மிக கனமான உறுப்பு - தோல்
7 . பால் பற்களின் எண்ணிக்கை 20
8. நமது உடல் எடையில் ஏறக்குறைய 7 கிலோ தோல் உள்ளது .
9. பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருக்கும் உயிரினம் - எலி
10. விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் பதிவு
செய்யப்பட்ட அமைப்பு - புளுகிராஸ் .
11. தமிழ்நாட்டின் மாநில விலங்கு - வரையாடு .
12 . தமிழ்நாடு கோழிவளர்ப்புத்துறை என்பதன் சுருக்கம் - TAPCO
(tamilnadu poultry corporation ).
13. மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் -
ஹிப்போகிரேட்டஸ் .
14. பெனிசிலியம் என்பது ஒரு பூஞ்சை , இதில் பச்சையம்
காணப்படுவதில்லை .
15. மருந்துகளின் ராணி பென்சிலின் .
16. ஒரு மனித குடலில் சராசரியாக ஒரு கிலோ பாக்டீரியாக்கள்
உள்ளன .
17. உயிரினங்களை தாவரங்கள் , விலங்குகள் என இரண்டாக
பிரிந்தவர் அரிஸ்டாட்டில்
18. இரைப்பை - சுரக்கும் நொதிக்கு இரைப்பை நீர் என்று பெயர் .
19. சிறுகுடலின் நீளம் சுமார் 7 மீட்டர் .
20. பெருங்குடலின் நீளம் சுமார் 1.5 மீட் டர் .
Tuesday, December 18, 2018
thengai pal kanji { coconut milk porridge}
தேங்காய் பால் கஞ்சி ;
தேவையானவை ;
1. பச்சை அரிசி - 1 கப் ,
2. முற்றிய தேங்காய் - 1 ,
3. வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன் ,
4. பூண்டு - 5 பல் ,
5. உப்பு -தேவையானவை .
செய்முறை;
பச்சையரிசியைக் நன்றாக கழுவி கொள்ளவும் . அதனுடன்
வெந்தயம் , உப்பு , உரித்த பூண்டு சேர்த்து குழைய வேகவிடவும் .
தேங்காயை அரைத்து பாலெடுத்து , அரிசி கலவையில் ஊற்றவும் .
அரிசி நன்றாக வெந்து பொங்கி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி
பரிமாறவும் .
குறிப்பு ;
காலை உணவாக சாப்பிட்டால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும் .
Saturday, December 8, 2018
Wednesday, December 5, 2018
Tuesday, October 9, 2018
aval idly
தேவையானவை ;
1. அவல் - 2 கப்
2.கெட்டி தயிர் - 1 கப்
3.பச்சைமிளகாய் - 6
4.கறிவேப்பில்லை ,
கொத்தமல்லி - 1 கைப்பிடி
5. கேரட் துருவல் - 1 கப்
6.எண்ணெய் - தாளிக்க
7. உப்பு -தேவையான அளவு
செய்முறை ;
அவலை கழுவி தண்ணீரை வடித்து விடவும் . ஒரு நிமிடத்திற்கு பிறகு அவலை உதிர்த்து தயிருடன் சேர்க்கவும் . இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை , கொத்தமல்லி , பச்சைமிளகாய் போட்டு , கேரட் துருவல் , உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்று கெட்டியாக கலக்கவும் . இட்லி தட்டில் எண்ணெய் தடவி , மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும் .
Friday, September 28, 2018
1. tamil thogupu(tet exam preparation )
( tamil thogupu) (1)
அ . திருவருட்பா ;( இராமலிங்க வள்ளலார் )
1.இராமலிங்க வள்ளலார் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்பு பெயர் பெற்றவர் .
2.கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர் .
3. பெற்றோர் ராமையா -சின்னம்மையார் .
4.ஜீவகாருண்ய ஒழுக்கம் , மனுமுறை கண்ட வாசகம் ஆகிய உரைநடை நூல்களை இயற்றியுள்ளார் .
5.தமிழ் உரைநடை உலகின் முன்னோடி .
6.வள்ளலார் எழுதிய பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது .
7.சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் .
8.மதங்களின் நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும் , பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அறிவு நெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர் .
9.வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்பது இவருடைய புகழ் பெற்ற வாசகம் .
10.வடலூர் அறச்சாலையில் இவர் மூட்டிய அடுப்பு இன்று அணையாமல் ,பசிப்பிணி தீர்க்கிறது .
11. வாழ்ந்த காலம் ; 05.10.1823 முதல் 30.01.1874.
Thursday, September 27, 2018
Wednesday, September 26, 2018
oil bathing(ennai kuliyal seiya ugantha natkal)
1.ஞாயிற்றுக்கிழமை - அழகு போகும் .
2. திங்கட்கிழமை - பொருள் சேரும் .
3. செவ்வாய்கிழமை - குடுபம்பத்திற்கு ஆகாது .
4. புதன்கிழமை - கல்வி தரும் .
5.வியாழக்கிழமை -அறிவு அழியும் .
6. வெள்ளிகிழமை -புகழ் உண்டாகும் .
7. சனிக்கிழமை - சம்பத்து உண்டாகும் .
( வீட்டிலிருந்து யாராவது ஊருக்கப் போனபிறகு எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது .)
Monday, August 27, 2018
saiva illakiyangal
சைவ இலக்கியங்கள்
1. திருக்கடைக்காப்பு - திருஞான சம்பந்தர்
2. தேவாரம் - அப்பர் ( திருநாவுக்கரசர் )
3. திருப்பாட்டு ,
திருத்தொண்டதொகை - சுந்தரர்
4. திருவாசகம் ,
திருவெம்பாவை ,
திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
5.திருமந்திரம் - திருமூலர்
6. மனோன்மணியம் - பெ. சுந்தரம் பிள்ளை
7.திருவிசைப்பா
திருப்பல்லாண்டு - திருமாளிகைத்தேவர்
8.ராமாயணம் ,
சிலையெழுபது ,
சடகோபரந்தாதி ,
திருக்கை வழக்கம் ,
சரஸ்வதி அந்தாதி - கம்பர்
9. அற்புதத்திருவந்தாதி ,
திருவிரட்டை மணிமாலை ,
திருவாலங்காட்டு மூத்த
திருபதிகங்கள் - காரைக்கால்
அம்மையார்
Friday, August 17, 2018
ragi biscuit
ராகி பிஸ்கட் ;
தேவையானவை ;
1. ராகி மாவு - 1/2 கப் ,
2. சர்க்கரை தூள் - 3/4 கப் ,
3. நெய் - 1/2 கப் ,
4. முந்திரி - 10,
5. பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை .
செய்முறை;
ராகி மாவையும், பேக்கிங் பவுடரையும் மூன்று முறை
சலிக்கவும் . இதனுடன் நெய், சர்க்கரை சேர்த்து கட்டிகள் இல்லாமல்
பிசையவும் . நறுக்கிய முந்திரியை போட்டு பிஸ்கட் போல தட்டவும் .
கடாயில் மணலை பரப்பி , 10 நிமிடம் சூடு செய்து , பிறகு ஒரு அலுமினிய
தட்டில் பிஸ்கட்டுகளை வைத்து , 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான
தீயில் வைத்து மூடி ' பேக் ' செய்யவும் . 'மைக்மிசிரோவேவ் அவன் '-ல்
செய்பவர்கள் 160 டிகிரி சென்டிகிரேட்டில் 20 நிமிடங்கள் ' பேக் '
செய்யவும் .
Friday, August 3, 2018
ragi puttu (samayal)
ராகி புட்டு
தேவையானவை;
1.வறுத்த ராகிமாவு -1 கப்
2.அச்சு வெல்லம் - 1/2 கப்
3. துருவிய தேங்காய் - 1/4 கப்
4. ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை ;
உப்பு கலந்த தண்ணீரை மாவில் சிறிது சிறிதாக தெளித்து புட்டுக்கு பிசைந்து கொள்ளவும் . 15 நிமிடம் கழித்து மிக்சியில் போட்டு சுற்றவும் (அப்பொழுதுதான் கட்டி இருக்காது ). ( கையாலையும் கட்டி இல்லாமல் உதிர்த்து கொள்ளலாம் ) இந்த மாவை இட்லி தட்டில் துணி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும் . வெந்த மாவில் உதிர்த்து துருவிய வெல்லம் அல்லது வெல்லப்பாகு (தேன் பதத்தில் ), துருவிய தேங்காய் , ஏலக்காய்த்தூள் கலந்து பரிமாறவும் .
குறிப்பு ;
வெல்லத்தை பாகாக செய்து சேர்த்தால் புட்டு தொண்டையை அடைக்காது .
Friday, June 29, 2018
Thursday, June 21, 2018
Subscribe to:
Posts (Atom)