ராகி புட்டு
தேவையானவை;
1.வறுத்த ராகிமாவு -1 கப்
2.அச்சு வெல்லம் - 1/2 கப்
3. துருவிய தேங்காய் - 1/4 கப்
4. ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை ;
உப்பு கலந்த தண்ணீரை மாவில் சிறிது சிறிதாக தெளித்து புட்டுக்கு பிசைந்து கொள்ளவும் . 15 நிமிடம் கழித்து மிக்சியில் போட்டு சுற்றவும் (அப்பொழுதுதான் கட்டி இருக்காது ). ( கையாலையும் கட்டி இல்லாமல் உதிர்த்து கொள்ளலாம் ) இந்த மாவை இட்லி தட்டில் துணி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும் . வெந்த மாவில் உதிர்த்து துருவிய வெல்லம் அல்லது வெல்லப்பாகு (தேன் பதத்தில் ), துருவிய தேங்காய் , ஏலக்காய்த்தூள் கலந்து பரிமாறவும் .
குறிப்பு ;
வெல்லத்தை பாகாக செய்து சேர்த்தால் புட்டு தொண்டையை அடைக்காது .
No comments:
Post a Comment