crispy chicken
க்ரிஸ்பி சிக்கன்
தேவையான பொருட்கள்:
1,சிக்கன் - 1கிலோ
2. வெங்காயம் - 1
3. முட்டை - 1
4. பால் - 1 கப்
5. மைதா - 2 ஸ்பூன்
6. சோள மாவு - 1 கப்
7. பிரிஞ்சி இலை - 1
8. கிராம்பு - 4
9. மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
10. மிளகு தூள் - 1 ஸ்பூன்
11. எண்ணெய் - தேவையானவை
12. உப்பு - தேவையானவை
செய்முறை ;
சிக்கனுடன் பெரியதாக நறுக்கிய வெங்காயம் ,
பிரிஞ்சி இலை , கிராம்பு , உப்பு, சிறிதளவு தண்ணீர்
சேர்த்து வேக விடவும். வெந்த சிக்கனை அடுப்பிலிருந்து
இறக்கி ஆற விட்டு , அதிலிருந்து வெங்காயம் , கிராம்பு ,
பிரிஞ்சி இலை ஆகியவற்றை எடுத்து விடவும் . பிறகு சோள
மாவு , மைதா மாவு , உப்பு , மிளகாய் தூள் , மிளகு தூள் , பால்
சேர்த்து கரைத்து கொள்ளவும் .
அத்துடன் முட்டையை அடித்து கலக்கி
சேர்த்து கொள்ளவும் . பிறகு வாணலியில் எண்ணெயை
சூடாக்கி கொள்ளவும் . வெந்த சிக்கனை கரைத்து வைத்து
இருக்கும் முட்டை கலவையுடன் தோய்த்தெடுத்து
,பொரித்தெடுக்கவும் .
பொரித்ததை சாஸுடன் பரிமாறவும் .
No comments:
Post a Comment