Friday, January 18, 2019

kudampuli mochai kuzhambu

குடம்புளி  மொச்சை  குழம்பு : 

தேவையான பொருட்கள் : 

1. பச்சை மொச்சைப் பயறு - 1 கப், 

2. குடம்புளி                                    -பெரிய                       

                                                            நெல்லிக்காயளவு,  

3. பச்சைமிளகாய்                     -  1,

4. மிளகு                                           -   1 டீஸ்பூன் ,

5. தனியா                                       -   2 டீஸ்பூன் , 

6. தேங்காய்                                  -   1 மூடி ,

7. எலுமிச்சை                               -  1/2,

8. கடுகு , கறிவேப்பிலை ,

    நெய் , வெல்லம்                    -   சிறிதளவு ,

9. உப்பு                                           -  தேவைக்கேற்ப 

செய்முறை : 

                    வாணலியில்  மிளகு , தனியாவை தனித்தனியாக  வறுத்து  

அதனுடன்  தேங்காய் சேர்த்து   மிக்ஸியில்  போட்டு  விழுதாக  அரைத்து 

கொள்ளவும் .  மொச்சைப்பயிரை  நன்றாக  வேக  வைத்து ,  அதில்  

 குடம்புளியை  கரைத்து  ஊற்றவும் . பின்னர்  அரைத்த  தேங்காய்  

விழுதை  சேர்த்து  கிளறி , வெல்லம் , உப்பு  சேர்த்து  கொதிக்க  விடவும் . 

வாணலியில்  நெய்  விட்டு  கடுகு , கறிவேப்பிலை  போட்டு  தாளித்துக்  

 கொட்டி     இறக்கவும் . கடைசியில்  எலுமிச்சை  சாறை  கலந்து  

பரிமாறவும்  .

 


  

Friday, January 4, 2019

crispy chicken

க்ரிஸ்பி  சிக்கன்


தேவையான  பொருட்கள்:

1,சிக்கன்                    -   1கிலோ 

2. வெங்காயம்         -   1

3. முட்டை                    -   1

4. பால்                          -    1 கப்  

5. மைதா                     -     2 ஸ்பூன் 

6. சோள  மாவு          -      1 கப் 

7. பிரிஞ்சி  இலை   -      1     

8.  கிராம்பு                  -      4

9. மிளகாய்த்தூள்    -      2 ஸ்பூன் 

10. மிளகு  தூள்          -       1 ஸ்பூன் 

11.  எண்ணெய்         -        தேவையானவை 

12. உப்பு                       -       தேவையானவை  

செய்முறை  ;

                 சிக்கனுடன் பெரியதாக  நறுக்கிய வெங்காயம் , 

பிரிஞ்சி இலை , கிராம்பு , உப்பு, சிறிதளவு  தண்ணீர்  

சேர்த்து  வேக  விடவும்.   வெந்த  சிக்கனை  அடுப்பிலிருந்து   

இறக்கி  ஆற  விட்டு , அதிலிருந்து  வெங்காயம் , கிராம்பு , 

பிரிஞ்சி  இலை  ஆகியவற்றை  எடுத்து  விடவும் . பிறகு  சோள  

மாவு , மைதா  மாவு , உப்பு , மிளகாய் தூள்  , மிளகு  தூள்  , பால்  

சேர்த்து  கரைத்து  கொள்ளவும் .

                                    அத்துடன்   முட்டையை  அடித்து  கலக்கி  

சேர்த்து  கொள்ளவும் . பிறகு வாணலியில்  எண்ணெயை   

சூடாக்கி  கொள்ளவும் . வெந்த  சிக்கனை  கரைத்து  வைத்து 

இருக்கும்   முட்டை  கலவையுடன்  தோய்த்தெடுத்து 

 ,பொரித்தெடுக்கவும் . 

             பொரித்ததை  சாஸுடன்  பரிமாறவும் . 

Wednesday, January 2, 2019

government exam preparation (science)part4

                                      அறிவியல் 

1. இந்திய  வாக்காளர்   தினம்    கொண்டாடப்படும்  நாள்    

ஜனவரி  ,25

2. ஆசிரியர்கள்  தினம்  கொண்டாடப்படும்  நாள்  செப்டம்பர்  5

3. குழந்தைகள்  தினம் கொண்டாடப்படும்   நாள்  நவம்பர்  14

4.  உலக  மாற்றுத்  திறனாளிகள்  தினம்  மார்ச்  17

5. தியாகிகள்  தினம்  (martyrs ' day ) அனுசரிக்கப்படும் நாள்  

    ஜனவரி  30

6. உலக  அஞ்சலக  தினம்  அக்டோபர்  9

7.  'தேசிய விளையாட்டு  தினம் ' ( National  Sports Day )  ஆகஸ்ட்  29

8.  உலக  செஞ்சிலுவை  தினம் மே  8

9. காமன்வெல்த்  தினம்  மே  24

10. ஐக்கிய  நாடுகள்  தினம்  (UN  Day ) அக்டோபர்  24

11. உலக மனித   உரிமைகள்  நாள்  டிசம்பர்  10

12. ஹிரோஷிமா  தினம்  ஆகஸ்ட் 6

13. உலகச் சுற்றுலா  தினம் செப்டம்பர்  27

14. விவசாயிகள்  தினம் டிசம்பர்  23

15. உலக  அமைதி   தினம் அக்டோபர்  2