( tamil thogupu) (1)
அ . திருவருட்பா ;( இராமலிங்க வள்ளலார் )
1.இராமலிங்க வள்ளலார் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்பு பெயர் பெற்றவர் .
2.கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர் .
3. பெற்றோர் ராமையா -சின்னம்மையார் .
4.ஜீவகாருண்ய ஒழுக்கம் , மனுமுறை கண்ட வாசகம் ஆகிய உரைநடை நூல்களை இயற்றியுள்ளார் .
5.தமிழ் உரைநடை உலகின் முன்னோடி .
6.வள்ளலார் எழுதிய பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது .
7.சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் .
8.மதங்களின் நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும் , பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அறிவு நெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர் .
9.வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்பது இவருடைய புகழ் பெற்ற வாசகம் .
10.வடலூர் அறச்சாலையில் இவர் மூட்டிய அடுப்பு இன்று அணையாமல் ,பசிப்பிணி தீர்க்கிறது .
11. வாழ்ந்த காலம் ; 05.10.1823 முதல் 30.01.1874.